Breaking News

அபிவிருத்தி என்ற ஆயுதத்தை கையிலெடுத்து சிங்கள மயமாக்கலை முன்னெடுக்க முயற்சி - சாடுகிறார் சி.வி

சமஷ்டியை பற்றி பேசுவதற்கு விரும்பாத மத்திய அரசு மாகாணங்களின் அதிகாரங்களை பிடுங்குவ திலேயே தொடர்ந்தும் குறியாக இருப்பதாக சாடியுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தொடர்ந்தும் இராணுவ மயமாக்கல், சிங்கள மயமாக்கலை முன்னெடுப்பதற்கு அபிவிருத்தி என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் பேரவை செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது மத்திய அரசாங்கமானது அனைத்து மாகாண சபைகளிற்கும் அங்கிகாரத்திற்காக அனுப்பி வைத்துள்ள இலங்கை நிலைபேறு அபிவிருத்தி சட்ட மூலம் தொடர்பான குழுநிலை விவாதத்தின் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் விவாதத்தின் போது அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்திருப்பதாவது,


மாகாணங்களுக்கான உரித்துக்கள் சம்மந்தமாக அதிகார பகிர்வு விடயங்கள் சம்மந்தமாக பல விடயங்கள் பேசப்பட்டு வரும்போது ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் தமது அறிக்கைகளை அனுப்ப வேண்டிய கட்டாயம் இருக்கும் போது என்ன காரணத்திற்காக இலங்கை நிலைபேறு அபிவிருத்தி சட்டமூலம் எனும் இப்பேர்ப்பட்ட சட்டத்தை கொண்டுவர உள்ளார்கள் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. 

அத்துடன் மத்திக்கு சகல அதிகாரங்களை எடுத்துக் கொள்வதற்காக ஒரு செயற்திட்டமாகவே இதனை நான் காண்கின்றேன். 2015ஆம் ஆண்டில் இருந்து எதிர்வரும் 15 ஆண்டுகளுக்கு அடைந்து கொள்ள வேண்டிய அபிவிருத்தி குறிக்கோள்களாக சகல நாடுகளுக்கும் 17 குறிக்கோள்கள் தரப்பட்டுள்ளன. 
இத்தகைய இக் குறிக்கோள்களை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளதுடன் இதன் அடிப்படையிலேயே வடக்கு மாகாண சபையானது செயற்பட்டு வருகின்றது. 

ஆகவே இது விடயமானது அவர்களுக்கு மாத்திரம் பொதுவான விடயமல்ல. அது எங்களுக்கும் பொருந்தும். ஆனால் எங்களுக்கு என்று சில உரித்துக்கள் 13ஆம் திருத்த சட்டத்தின் மூலம் தரப்பட்டுள்ளது. வடக்கு மாகாணம் தொடர்பான திட்டமிடலை நாங்கள் செய்ய முடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே இச் செயற்பாடானது எங்களது செயற்பாட்டுக்கு அமைவாக நடக்கின்றதா இல்லை அதற்கு அப்பால் நடக்கின்றதா என்ற கேள்வியெழுகின்றது. மேலும் இவ் நிலையான அபிவிருத்தி குறிக்கோள்கள் சம்மந்தமாக சில விடயங்களை எடுத்து பார்த்தால் இதற்கு கையெழுத்திட்ட அரசாங்கமானது அதற்கு பாதகமாகவேதான் பல விடயங்களை செயற்படுத்தி வருகின்றது. 

அதாவது குறிக்கோள்களில் 16ஆவது குறிக்கோளான எந்தவிதமான வன்முறைகளை எடுப்படுத்த கூடிய விடயங்களை தவிர்த்தல் வேண்டும் என கூறுகின்றது. ஆனால் வடக்கிலே அரசாங்கமானது ஒரு இலட்சத்து ஜம்பதாயிரம் இராணுவத்தை குவித்து வைத்துக்கொண்டு தான் வன்முறைக்கு எதிராக பேசு கின்றார்கள். ஆகவே நாம் பல விதமான விடயங்கள் தொடர்பாக மத்திய அரசாங்கத்துடன் பேச வேண்டி யுள்ளதுடன் தற்போதும் பேசிக் ;கொண்டும் உள்ளோம்.

இந்த அடிப்படையில் நாங்கள் சில நடவடிக்கைகளை எடுக்கும் போது பல விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பல மிக்கதோர் இலங்கை எனும் தலைப்பில் தரப்பட்டுள்ள நூலிலே ஒரு பக்கத்தில் வடக்கு கிழக்கு பொருளாதார வாயில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேநேரம் 2ஆம் பக்கத்தில் கிழக்கு மற்றும் வட கிழக்கு பொருளாதார அபிவிருத்தி கருத்திட்டங்கள் என்பதின் கீழ் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் அது சார்ந்த பகுதியை கைத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறை அடங்கிய பொருளாதார வலயமாக மாற்றுதல் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதனூடாக விளங்கும் அர்த்தம் மத்திய அரசாங்கமானது மாகாண அரசாங்கத்திற்கு அப்பால் சென்று பெரும்பான்மை இனத்தவர்களை அங்கு கொண்டு வந்து குடியேற்ற கூடிய விதத்திலே இந்நடவடிக்கை அமைந்திருக்கின்றது. இதேபோன்று விவசாயதுறை மற்றும் விவசாய உற்பத்திகளை அடிப்படையாக கைத் தொழில் அபிவிருத்தி என குறிப் பிடப்பட்டுள்ளதுடன் இவை அனைத்தும் முழு நாடும் ஒரே கருத்துடன் செல்கின்றது ஒரேவிதமான பொருளாதார திட்டங்களை கருத்தில் எடுத்து செல்கின்றது.

ஆகவே இதனை நாங்கள் நடைமுறைப்படுத்தலாம் என்ற அடிப்படையில் சென்றால் மாகாணங்களுக்கு இருக்கின்ற உரித்துக்கள் பாதிக்கப்பட போகின்றன.

ஆகவே மாகாணங்களுக்கான சட்டங்கள் உரித்துக்கள் தொடர்பாக தெளிவாக வரையறுத்தப்பட்டு சட்டங்கள் கொண்டுவரப்படாமல் இந்த அவசரத்திலேயே இப்பேர்ப்பட்ட சட்டங்கள் கொண்டுவரப்படு வது தமக்கு ஐயத்தை ஏற்படுத்துகின்றது. காரணம் மத்திக்கு சகல அதிகாரங்களையும் எடுத்துக்கொள் வதற்கான ஒரு செயற்திட்டமாகவே இது எனக்கு படுகின்றது. 

எனவே இது சம்மந்தமான விடயங்கள் ஆராயப்பட்டு மாகாணங்களுக்கு உரிய உரித்துக்கள் தரப்பட்ட பின்னர்தான் இது சம்மந்த மாக நாம் ஆராய வேண்டும். அதனை விடுத்து அதற்கு முன்னர் இதற்கு அனுமதியளிக்க கூடாது என முதலமைச்சர் தனது உரையின் போது குறிப்பிட்டிருந்தார்.