ஜனாதிபதி மைத்திரி மட்டக்களப்பு விஜயம்
‘எல்லோரையும் சமமாக நிர்வகித்தல்’ திட்டத்தை செயற்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
முதல் நிகழ்வாக களுவாஞ்சிக்குடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வைத்தியசாலையை திறந்துவைக்கவுள்ள ஜனாதிபதி, தொடர்ந்து ஏறாவூரில் நடைபெறவுள்ள பழ மர நடுகை, சிரமதானம், போதை ஒழிப்பு பேரணி ஆகியவற்றில் கலந்துகொள்ளவுள்ளார்.
தொடர்ந்து ஓட்டமாவடியில் குடிநீர்த் திட்டத்தையும் திறந்துவைக்கவுள்ளார். இதற்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மேற்கொண்டுள்ளார்.
இந்நிகழ்வுகளின் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, முதலமைச்சர் நஸீர் அஹமட் மற்றும் அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.