Breaking News

சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு



தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி மைதானத்தில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை, யாழ்.மேல் நீதிமன்றில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) நடைபெற்றது.

குறித்த வழக்கின் எதிரிகள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்த நிலையில், யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியை சூழவுள்ள பகுதியில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அத்தோடு, அவரது வாகன தொடரணிக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

சுமந்திரனை கொலை செய்வதற்காக சதித்தட்டம் தீட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சதித்திட்டம் தொடர்பான சந்தேகத்தின் பேரில் ஐவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடுதலையை விலைபேசும் சுமந்திரன்-சிறப்பு பார்வை


முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்