Breaking News

தமிழ் மக்களை குழப்ப வேண்டாம்! - சிவாஜிலிங்கம்



விசாரணை நடைபெறுகின்றது, புலனாய்வா ளர்களின் அறிக்கை என்ற பெயரில் தமிழ் மக்களை குழப்பவோ, துன்புறுத்தவோ வேண்டாம் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். 

முன்னாள் போராளிகளை மீண்டும் சந்தேகத்தில் கைதுசெய்வது அவர்கள் மத்தியில் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டுமொரு பயங்கரமான சூழ்நிலைக்குள் தமிழ் மக்களை தள்ளும் முயற்சி இதுவென்றும் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய எம்.கே. சிவாஜிலிங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மீதான கொலை முயற்சியினால் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,


ஸ்ரீலங்கா ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ, ஸ்ரீலங்காவின் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்களோ சுமந்திரன் மீதான கொலை முயற்சி மற்றும் சதி சம்பந்தமான அறிக்கையை உடனடியாக நாடாளுமன்றத்தில் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனைவிடுத்து, 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை துன்புறுத்தி அவர்களை விரக்தியில் தள்ளவேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.