சுதந்திரத் தினத்தை புறக்கணித்து யாழில் ஆர்ப்பாட்டம்
சுதந்திரத் தினத்தை புறக்கணித்து யாழ். பழைய பூங்கா முன்னால் வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தலைமையில் கறுப்பு பட்டிப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
நாட்டின் 69ஆவது சுதந்திரத் தினத்தன்று ஐந்து அம்சகோரிக்கையை முன்வைத்து கறுப்புப் பட்டி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக சிவாஜிலிங்கம் ஏற்கனவே அறிவித்திருந்ததற்கு அமைய இன்று குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சர்வேஸ்வரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.
இதன்போது, காணாமல் ஆக்கப்பட்ட 200இற்கும் அதிகமான தமிழர்களின் நிலைக்கு பதில் கூறு, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை உடனடியாக விடுவியுங்கள், மீளக் காணிகள் சுவீகரிக்க எடுக்கும் நடவடிக்கைகளை கைவிடு, இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் மற்றும் இனப்பிரச்சினைக்கு சர்வதேச மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண வேண்டும் என கோஷமெழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், குறித்த பகுதியில் கலகம் அடக்கும் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.