வவுனியா பாணியில் போராட்டத்தை முடக்க முயற்சி
வவுனியா பாணியில் கேப்பாபுலவிலும் போராட்டத்தை முடக்கும் முயற்சியில் அரசியல்வாதிகள்-விழிப்புடன் செயற்படுமாறு மக்களுக்கு வேண்டுகோள்
வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் ரணில் அனுப்பி வைத்த உத்தரவாதத்திற்கமைய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரின் உறுதிமொழியை அடுத்து கைவிடப்பட்டதுபோல இன்று போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு வந்த த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் செயற்பட்டதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டகாரருடன் உரையாடிய பாராளுமன்ற உறுப்பினர் உங்கள் போராட்டம் நியாயமானது என உரையை ஆரம்பித்து இறுதியாக தான் கொண்டுவந்த விடயத்திற்கு வந்து போராட்ட குழுவிலிருந்து மூவரை வருமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு தான் ஏற்பாடு செய்து தருவதாகவும்“ கூறியுள்ளார்.
இருந்தும் அதனை முன்னின்று நடாத்துபவர்கள் ஏற்றுக்கொள்ளாததோடு போராட்டம் தொடர்ந்தும் நடைபெறும் என்றும் வேண்டுமானால் போராட்டக்காரரிலிருந்து மூவரை அனுப்புகின்றோம் ஆனால் முடிவு வரும்வரை போராட்டத்தை நிறுத்த முடியாது என உறுதிபடத்தெரிவித்துள்ளனர்.
இருந்தும் கேப்பாபுலவிலிருந்து போராட்டத்தை புதுக்குடியிருப்புக்கு நகர்த்தியுள்ளதோடு இன்று அதனை புலக்குடியிருப்பை தாண்டி கேப்பாபிலவு கிராமத்தையும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற ரீதியில் போராட்டத்தை நலிவுறச்செய்வதற்கான ஏற்பாடுகளில் சில அரசியல்வாதிகள் மறைமுகமாக செயற்படுவதாக தமிழ்க்கிங்டொத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. அதுதொடர்பான ஆதாரங்கள் விரைவில் வெளியிடுவோம் என்பதை அறியத்தருகின்றோம்.

முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்