Breaking News

தாஜுதின் கொலைக்கு காரணம் காதல் விவகாரம்: ராஜித

தாஜுதின் கொலை செய்யப்பட்டமைக்கு காரணம் காதல் விவகாரம் எனவும் குறித்த காதல் விவகாரத்துடன் தொடர்புடைய பெண் தாஜுதின் உடன் மாத்திரம் இருந்திருந்தால் கொலை சம்பவம் நிகழ்ந்து இருக்காது என அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.


அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் நேற்று (புதன்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

டுபாய் வங்கி சம்பந்தப்பட்ட அலோசியஸ் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, “கடந்த காலங்களில் டுபாய் வங்கிகளில் பணத்தை யார் வைத்திருந்தது என்று எல்லோருக்கும் தெரியும் குறித்த அலோசியஸ் என்பவரும் நாமலும் ஒன்றாக இரவு பகலாக இருந்தனர்” என கூறினார்.

நாடாளுமன்றத்தில் தனக்கும் அலோசியசுக்கும் தொடர்பு இல்லை குறியிருந்ததாக ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர், “தன்னுடைய காதலி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தால் தனக்கு எவ்வளவு கோவம் வரும் அது போல இவர் கோவத்தில் பேசியிருபார் என இதன் போது குறிப்பிட்டார்.

இதேபோல தான் தாஜுதினின் கொலை சம்பவமும் குறித்த பெண் ஒருவரை காதலித்திருந்தால் பரவயில்லை அவர் தாஜுதினையும் காதலித்திருந்ததால் தான் இந்த கொலை நிகழ்ந்துள்ளது என தெரிவித்தார்.