சுப்பர் சிங்கர் "பிரகதி" கதாநாயகியாகின்றார்.
இயக்குநர் பாலா இயக்கவுள்ள புதிய படத்தில்
சுப்பர் சிங்கர் "பிரகதி" நாயகியாக அறிமுகமாகவுள்ளார். தாரை தப்பட்டை படத்துக்குப் பிறகு இயக்குநர் பாலா இயக்கும் சாட்டை படத்தில் நடித்த யுவனுக்கு ஜோடியாக பிரகதி நடிக்கிறார்.
சுப்பர் சிங்கர் "பிரகதி" நாயகியாக அறிமுகமாகவுள்ளார். தாரை தப்பட்டை படத்துக்குப் பிறகு இயக்குநர் பாலா இயக்கும் சாட்டை படத்தில் நடித்த யுவனுக்கு ஜோடியாக பிரகதி நடிக்கிறார்.
இதுதொடர்பாக பிரகதி அளித்த பேட்டியில் இயக்குநர் பாலா தன்னுடைய படத்தின் கதாநாயகியாக என்னைத் தேர்வு செய்தது எனக்கு பெரிய இன்பதிர்ச்சி. என்னை எப்படித் தேர்வு செய்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு உன்னை எனக்குப் பிடிக்கும். உன் திறமையை நான் மதிக்கிறேன். உனக்குப் பாடுவது சுலபமாக வருகிறது. நடிப்பது அதை விட சுலபம் என்றார்.
பாடகியாக அறிமுகமாகி தற்போது படத்தின் கதா நாயகியாக பிரபல்யமாகியுள்ள பிரகதி தொடர்ந்தும் தமிழ் சினிமா திரையுலகில் தனது திறமையால் இடம்பிடிப்பார் என நம்பப்படுகின்றது.
முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்