Breaking News

மஹிந்த, கோத்தபாய விரைவில் கைது செய்யப்படுவர்



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவர் என தேசிய சங்க சபையின் தலைவர் மாதுரு ஒயே தம்மிஸ்ஸர தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்:
வரலாற்று காலத்திலிருந்து இலங்கை பெளத்தர்கள் மீது தொடரும் ஆக்கிரமிப்புக்கள் 2500 வருடங்களுக்கு பின்னரான இன்றும் குறைவில்லை. இதனை எதிர்க்கின்றமையினாலேயே விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டார். இதன் அடுத்த கட்டமாக விரைவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, கோத்தபாய ஆகியோரும் கைது செய்யப்படுவர்.

அம்பாந்தோட்டையில் அண்மையில் நாட்டினை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கின்றமைக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது பிக்குகளின் காவி உடைகளை களைந்து துரத்தியடிக்குமாறு பொலிஸ் மா அதிபர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். இவற்றையெல்லாம் இந்த நாட்டினை சங்க சபையான நாங்கள் அனுமதியோம். இந்த நிலைமை நீடித்தால் பெரும் அழிவுக்கு முகம்கொடுக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.