Breaking News

நீண்ட இழுபறிக்குப் பின்னர் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கையை பொறுப்பேற்றார் அமைச்சர்

உள்ளூராட்சி எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் நேற்று சிறிலங்காவின் உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டது.


அசோக பீரிஸ் தலைமையிலான இந்தக் குழுவின் ஐந்து உறுப்பினர்களும் அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். அறிக்கையை கையளிக்கும் நிகழ்விலும் அவர்கள் பங்கேற்றனர்.

இந்த அறிக்கையில் சில திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர், உள்ளூராட்சி வட்டாரங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வரும் ஜனவரி 31ஆம் நாள் வெளியிடப்படவுள்ளது.

எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கையில் அதன் உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திடுவதில் இழுபறிகள் காணப்பட்டன. இதனைக் காரணம் காட்டி அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த அறிக்கையை கையேற்காமல் இழுத்தடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லை நிர்ணயக் குழுவின் பரிந்துரைக்கு அமைய, வட்டார எல்லைகள் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட பின்னர், விரைவில் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.