Breaking News

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம்



தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். 

வவுனியாவிலுள்ள முருகன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் பேரணியாக சென்று வவுனியா மாவீரன் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.