Breaking News

அரசாங்கத்துக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை

“யாழில் உள்ள குளங்களை புனரமைக்க வேண்டும் என தொடர்ச்சியாக நல்லாட்சி அரசிடம் கோரிக்கை விடுத்த போதும், நல்லாட்சி அரசு அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை” என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத்தலைமையில்  நேற்று இடம்பெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழில் உள்ள குளங்களை புனரமைக்க வேண்டும் என தொடர்ச்சியாக நல்லாட்சி அரசிடம் கோரிக்கை விடுத்த போதும் நல்லாட்சி அரசு அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதனால், தற்போது நிலவும் வரட்சி காரணமாக மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 

நல்லாட்சி அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் இது தொடர்பில் அரசுக்கு அழுத்தங்களை கொடுக்கவில்லை. அனைவரும் கட்சி நலன் சார்ந்து செயற்பட்டு வருகின்றனர்” என்றார்.