மஹிந்த சொன்ன அரசியல் மாற்றம் நடக்கும், மைத்திரியின் கூற்று பிழை- ஜி.எல்
அரசாங்கத்தை மாற்றுவதென்பது பாராளுமன்றத்தை தலைகீழாக மாற்றுவதாகும் என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை மாற்றுவதற்கு ஜனாதிபதியினதும் சபாநாயகரினதும் உதவி இன்றி முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்திருந்தார். இது தவறானது எனவும் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டார்.
இந்த வருடத்தில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியது எதிர்வரும் நாட்களில் சான்றாக காண முடியும் எனவும் ஜி.எல். பீரிஸ் எம்.பி. இன்று உடுகம்பல பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.