புரட்சியின் ஆரம்பம் பொதுக் கூட்டம் இன்று
கூட்டு எதிர்க் கட்சியினால் ஏற்பாடு செய்துள்ள “புரட்சியின் ஆரம்பம்” பொதுக் கூட்டம் இன்று (27) பிற்பகல் 2.30 மணிக்கு நுகேகொடையில் நடைபெறவுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள் என கூட்டு எதிர்க் கட்சி அறிவித்துள்ளது.
கூட்டு எதிர்க் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளும் இதில் கலந்துகொள்ளவுள்ளன.
இக்கூட்டத்தில் அரசாங்கத்திலிருந்து பிரிந்து கூட்டுச் சேரவுள்ள எவரையும் கலந்துகொள்ள வேண்டாம் என மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.
நுகேகொடைக் கூட்டத்துக்கு பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகள் பலர் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சியினர் கூறி வந்த நிலையிலேயே மஹிந்த ராஜபக்ஷ கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரடியாக இந்த அறிவித்தலை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.