காணாமல் போனோருக்கு ஆதரவாக நல்லூரில் அடையாள உண்ணாவிரத போராட்டம்
காணாமல் போன தமது உறவுகளை கண்டுபிடித்து
தருமாறு கோரி வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக, யாழ்.நல்லூரில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத பேராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தருமாறு கோரி வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக, யாழ்.நல்லூரில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத பேராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டும் கைதுசெய்யப்பட்டும் காணாமல் போன மற்றும் ராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல் போன தமது உறவுகளின் உண்மையான நிலையை பகிரங்கப்படுத்துமாறும் தடுப்பிலுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் வலியுறுத்தி வவுனியாவில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம், எவ்வித தீர்வும் இன்றி நான்காவது நாளாக இன்றும் தொடர்கிறது.
குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழர் தாயகத்தின் பல பகுதிகளிலும் பேரணிகளும் அடையாள உண்ணாவிரத போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.