Breaking News

கண்டியில் கோர விபத்து: இருவர் உயிரிழப்பு – 37 பேர் படுகாயம்



கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஸ்யால பிரதேசத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு 37 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்தும் எதிர்த்திசையில் வந்த பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இவ் விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வத்துபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுள் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ் விபத்தினால் பஸ்யால பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.