இனவாதிகளை உறையில் கட்டி கடலில் வீச வேண்டும்- சந்திரிக்கா
நாட்டில் இனவாதத்துக்கு இனிமேல் இடமில்லை. அப்படி யாராவது இனவாதம் பேசினால், அவர்களை ஒரு உறையில் போட்டு கடலில் வீசுவதைத் தவிர வேறு தண்டனையொன்று வழங்க முடியாது என நான் நினைக்கின்றேன். ஏனையவர்கள் இதனை எவ்வாறு பார்க்கின்றார்களோ தெரியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
இந்த நாட்டில் துரதிஷ்டம் என்னவென்றால், இந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒருவரும் இனவாதக் குழுவொன்றை வைத்துக் கொண்டு இனவாதத்துக்கு தலைமை தாங்கி நாட்டிலுள்ள நல்லிணக்கத்தை குளப்ப முயற்சித்து வருகின்றார் எனவும் சந்திரிக்கா குமாரதுங்க மேலும் குற்றம்சாட்டினார்.
ரக்வானைப் பிரதேசத்தில் இன்று (19) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.