கண்டியில் பரவியுள்ள பயங்கரமான வைரஸ்!! 3 பேர் பலி
வீட்டில் யாருக்கேனும் தடிமனுடன் காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அரசாங்க வைத்தியசாலைக்கு சென்று மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கண்டி பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க, பொது மக்களிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.இது இன்ஃபிலுவென்சா ஏ எச்.வன்.என்.வன் வைரஸ் தாக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம் என்பதறகாகவே இந்த உடனடி சிகிச்சை அவசியப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
அதேநேரம், அநாவசியமாக கண்டி வைத்தியசாலைக்கு சிறார்களையும், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களையும் அழைத்துவர வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த எட்டாம் திகதியில் இருந்து கண்டி வைத்தியசாலையில் ஏ எச்.வன்.என்.வன் வைரஸ் தாக்கத்தினால் 3 பேர் உயிரிழந்தனர்.அத்துடன் ஐந்து பேருக்கு இந்த வைரஸ் தாக்கம் இருக்கிறது என்று சந்தேகிக்கப்படுகிறது.இந்த நிலையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.