Breaking News

மைத்திரியே அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்..!!



சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவே, அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குச் சிறந்த வேட்பாளர் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

காலியில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் சந்திம வீரக்கொடி, ‘அடுத்த அதிபர் தேர்தல் 2021ஆம் ஆண்டில் நடக்கும்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில், அதிபர் மைத்திரிபால சிறிசேனவே, அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு மிகவும் பொருத்தமானவர்.

மைத்திரிபால சிறிசேனவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த அதிபர் தேர்தல் வேட்பாளர் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.