வட மாகாண சபையின் செயற்பாட்டுக்கு ஹெல உறுமய கட்சி சிவப்பு சமிக்ஞை
வட மாகாணம் சபை தனது அதிகாரத்துக்கு அப்பால் சென்று செயற்பட்டால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது.
அக்கட்சியின் தலைவர் ஹெடிகல்லே விமலசார தேரர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாண சபை பல தடவைகள் தன்னுடைய அதிகாரத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாகவும் தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.
வட மாகாண சபையின் எல்லையற்ற செயற்பாட்டை அரசாங்கம் தலையிட்டு தடுக்க வில்லையாயின் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தேரர் மேலும் கூறியுள்ளார்.