சம்பந்தனுக்கு கொழும்பில் புதிய வீடு
எதிர்க்கட்சி தலைவராக பதவி ஏற்று சுமார் 2 ஆண்டுகளின் பின்னர் எதிர்க்கட்சி தலைவருக்கான உத்தியோகப்பூர்வ வாசஸ்தலம் இரா. சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ வீட்டில் இதுவரை காலமும் மறைந்த முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயகவும் அவ்ரதும் குடும்பமும் வசித்து வந்தது, ரத்னசிறியின் மரணத்தின் பின் காலியான வீடு இப்போது சம்பந்தனுக்கு கிடைக்கவுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக உள்ளூராட்சி அமைச்சு, பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சு, ஊடகங்கள் என்று பர்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் ஒரு மரணத்தின் மூலம் அந்த வீடு காலியாகும்வரை அது சம்பந்தனுக்கு வழங்கப்படவே இல்லை.