Breaking News

முள்ளிவாய்க்காலில் அதிசயம்! தாயும் குழந்தையும் போல காட்சியளிக்கும் மரம்!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் காணப்படும் ஒரு மரத்தின் தோற்றம் அப்பகுதி மக்களுக்கு கடந்த யுத்தகாலத்தின் அவலநிலையை மீள் நினைவூட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


யுத்த சூழலில் ஒரு தாய் தனது குழந்தையை பாதுபாப்பு கருதி ஒரு மரத்தின் பின் ஒளிந்திருப்பது போன்ற காட்சியை அந்த மரம தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் மாபெரும் ஒரு இன அழிப்பு போர் நடந்து கொண்டிருந்தது.

அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளை அழிக்கின்றோம் என்று சூளுரைத்துக் கொண்டு அப்பாவிப் பொதுமக்களை அழித்தொழித்தார்.

குறித்த பிரதேசத்தில் அதி உச்சக் கட்டமாக தாக்குதல்கள் நடைபெற்ற போது பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அகதிகளாகப்பட்ட நிலையில் நிர்க்கதியாக அவ்விடத்திலே கொல்லப்பட்டார்கள்.

அப்பொழுது தமிழ்த் தாய்மார் தமது எதிர்கால சந்ததியினர் மீண்டும் புதியவாழ்வில் புத்துயிர் பெற்று வாழ வேண்டும் என்று விரும்பினார்கள.

அதற்காக யுத்தத்தின் போது கண்மூடித்தனமான தாக்குதல்களில் இருந்து தமது குழந்தைகளை பாதுகாப்பதில் அவர்கள் சொல்ல முடியாத துன்பங்களை சந்தித்துள்ளார்கள்.

இந்த நிலையில் தற்பொழுது அங்கே மரத்தில் காணப்படும் சிறப்பு தோற்றமானது அன்று நடந்த கொடூர யுத்தத்தில் தாய்குலம் பட்ட துயரத்தை வெளிப்படுத்தி நிற்பதாகவே பொதுமக்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது..