Breaking News

உயர்மட்ட அதிகாரியை கொழும்புக்கு அனுப்பினார் ட்ரம்ப்



அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள ஏஞ்சலா அக்கேலர், சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்றதையடுத்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவி இராஜாங்கச் செயலர் பதவிக்கு, ஏஞ்சலா அக்கேலர், கடந்த 20ஆம் நாள் நியமிக்கப்பட்டார்.

இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டதையடுத்து, முதல்முறையாக சிறிலங்கா வந்துள்ள இவர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இங்கு தங்கியிருந்து நிலைமைகளை ஆராயவுள்ளார்

நேற்று இவர், சிறிலங்காவின் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரட்ண பரணவிதானவை சந்தித்து, தகவல் உரிமைச் சட்டம் மற்றும் சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் தொடர்பான கேட்டறிந்தார்.

அதையடுத்து, சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் ஏஞ்சலா அக்கேலர், சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இவர் தமது பயணத்தின் முடிவில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.