அரசாங்கம் பலவீனமடையும்போது எதிரணியினரை சிறையிலிடுகின்றனர்: மஹிந்த குற்றச்சாட்டு
அரசாங்கம் பலவீனமடையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களை கைது செய்து சிறையிலடைக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் தன்னை சந்திக்கவுள்ளதாகவும், அந்த சந்திப்பானது நல்ல முறையில் இருக்குமா என்பதை ஊகிக்க முடியாதுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு எதிராக இன்று பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. சிலர் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஆகையால் அவர்களை சிறைச்சாலைகளுக்கு சென்று பார்க்கவேண்டியுள்ளது.
இந்த அரசாங்கம் பலவீனமடைந்து வருகின்றது. ஆகையினாலேயே எமது செயற்பாடுகளை முடக்குவதற்காக இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது. எந்த எதிர்ப்பு மற்றும் தடைகள் வந்தாலும் எமது பயணத்தை தொடர்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.