Breaking News

இலங்கை தொடர்பான விவாதத்தை பிற்போட த.தே. கூட்டமைப்பு ஆதரவு



ஸ்ரீலங்கா தொடர்பான விவாதத்தை இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு பிற்போடுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையை கோரியுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சமஷ்டி ஆட்சி முறை கிடைக்கப் போவதில்லை எனவும், ஒற்றையாட்சி முறையே நடைமுறைக்கு வரும் என்பதும் வெளிப்படையாக தெரியவந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் மக்ளுக்கு தெழிவூட்டும் நிகழ்வு களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒன்றையாட்சி முறையை அழுல்படுத்தும் நடவடிக்கைகளை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என்பவர் கொடூரமானவர் எனவும், அவரே தமிழ் இனத்தை அழித்தவர் கே. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மஹிந்த மீது கொண்ட வெறுப்பினால், அவரை வீட்டிற்கு அனுப்பவேண்டும் என்ற எண்ணத்தில், பேரம் பேசாமல் தமிழ் மக்கள் நல்லாட்சிக்கு வாக்களித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.