நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை: வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டின் பல பாகங்களிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் கடுமையான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வளிமண்ட லவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வட மத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் கடுமையான மழையை எதிர்பார்க்க முடியும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
பிற்பகல் 2.00 மணி முதல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.