மகசின், அனுராதபுர சிறைகளில் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்
கொழும்பு மகசின் மற்றும் அனுராதபுர சிறைச்சாலைகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமது வழக்குகளை விரைவுபடுத்த வேண்டும் என்று கோரியே இவர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் அல்லது வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்று முன்னர் உண்ணாவிரதப் போராட்டங்கள் அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டது.
எனினும், தமது வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதாக அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.