ஜனாதிபதி வரும் போது அமைதியாக இருக்க வேண்டும்! கேப்பாபிலவு மக்களுக்கு படையினர் எச்சரிக்கை!
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தரும்போது, கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தக் கூடாது என படைத்தரப்பினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
இந்த உத்தரவை மீறி செயற்பட்டால்,உங்களுக்கு எந்த உதவிகளும் கிடைக்காது எனபடைத்ரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்,ஜனாதிபதி இந்த மாதம் 25 ஆம் திகதி வருகை தருவார், மாற்றுக் காணிகள்மற்றும் 25 லட்சம் ரூபா செலவில் வீட்டுத் திட்டங்களையும் வழங்கிவைப்பார்.
இவற்றை பெற்றுக் கொண்டு அமைதியாக இருப்பதே நல்லது என படையினர் எச்சரிக்கைவிடுத்தனர் என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கேப்பாபிலவு கிராம மக்களுக்கு சொந்தமான 524 ஏக்கர் காணி,போரின் பின்னர்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ஏழு வருடங்கள் கடந்துள்ளநிலையிலும் அம் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு படையினர் மறுத்து வருகின்றமைகுறிப்பிடத்தக்கது.
கேப்பாபிலவு கிராம மக்கள் தெரிவித்த கருத்துக்களை மேற்கோள் காட்டி பத்திரிகைஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.