Breaking News

லசந்த படுகொலை – சரத் பொன்சேகாவிடம் பல மணிநேரம் விசாரணை



சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நேற்று இந்த விசாரணைகளை மேற்கொண்டனர்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சிறிலங்கா இராணுவத் தளபதியாக பதவியில் இருந்த போதே, 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தக் கொலையுடன் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் தொடர்புபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

பல மணிநேரம் இந்த விசாரணைகள் இடம்பெற்றதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.