Breaking News

கைதடியில் சிங்கள மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டால் யாழில் போராட்டங்கள் வெடிக்கும் -சிவாஜி எச்சரிக்கை

வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் கைதடியில் அமைக்கப்பட்டுவரும் வீடுகள் எமது மாவட்ட மக்களைத்தவிர சிங்கள மக்களுக்கு கொடுக்கப்படுமேயானால் யாழில் போராட்டங்கள் வெடிக்கும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்கே. சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்தார்.

வீடமைப்பு அதிகாரசபையினால் நாவற்குழிப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் 200 வீடுகள் கொண்ட மாதிரிக்கிராமத்தினை எமது மக்களுக்கு மட்டுமே பகிர்ந்தளிக்கவேண்டும். அதனைவிட்டுவிட்டு சிங்கள மக்களுக்கு வீடுகளை வழங்கி அவர்களை அங்கே குடியேற்றினால் இங்கே பலத்த போராட்டங்கள் அரசாங்கத்துக்கு எதிராகவும் வீடமைப்பு அதிகார சபைக்கு எதிராகவும் நாம் முன்னெடுப்போம். 

அத்தோடு யாழ் போதனா வைத்தியசாலையின் சிறுவர் பிரிவிற்கான கட்டத்தை அமைப்பதற்காக யாழ் பேரூந்து நிலையத்தினை அண்டிய பகுதிகள் சுவீகரிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதியின் செயலாளரினால் யாழ்போதனா வைத்தியசாலையின் தலைமை அதிகாரிக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. 

அந்தக் கடிதம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் குறித்த பகுதியினை அபகரிக்கும் செயல் நடைபெற்றால் அதற்கு எதிராக நாம் கடுமையான நடவடிக்கையை எடுப்போம்.

வைத்தியசாலை அமைப்பதற்கு போதியளவு காணி தீவகப்பகுதிகள் மற்றும் பலாலி வீதிகளை அண்டிய பகுதிகளில் தாராளமாகக் காணப்படுகின்றன. அதனை விட்டுவிட்டு நீண்டகாலமாக ஒற்றுமையாக வாழும் யாழ் குடாநாட்டின் நகரப்பகுதிகளில் காணி களை அபகரித்து வைத்தியசாலைக்கட்டடங்கள் அமையுமானால் யாழ்ப்பாணத்துக்கு எந்த ஒரு தென்னிலங்கை அரசின் பிரதிநிதி கள் எவரும் தமிழ் மக்கள் வசிக்கும் மண்ணில் காலடி வைக்கமுடியாது என நேற்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட த்தில் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.