இலங்கையில் கால் வைக்கிறது சீ்னாவின் அலிபாபா
உலகின் மிகப் பிரபலமான சீன இணைய வணிக நிறுவனமான அலிபாபா, சிறிலங்காவில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக சிறிலங்கா நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
டாவோசில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில், அலிபாபா நிறுவனத்தின் தலைவரான ஜாக் மாவை, சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று முன்தினம் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போதே, சிறிலங்காவில் முதலீடு செய்வதற்கான உடனடி நடவடிக்கையை ஆரம்பிக்கப் போவதாக, அலிபாபாவின் தலைவர் ஜாக் மா தெரிவித்துள்ளார்.
தமது முதலீட்டு திட்டம், நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் அமைந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.