மட்டக்களப்பில் சம்பந்தனின் பொங்கல் விழா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த பொங்கல்
இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.
இதனையொட்டி கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றது.
கல்லடி பாலத்திலிருந்து பண்பாட்டு பவனியுடன் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் உள்ளிட்ட அதிதிகள் மலர்மாலை அணிவித்து அழைத்து விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள் உறுப்பினர்கள் கட்சியின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டதாக தமிழ்கிங்டொத்தின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தொடர்புடைய முன்னைய செய்திகள்
சம்பந்தன் ஐயாவின் கொடும்பாவியை யாரும் எரிக்கக்கூடாது (காணொளி)
முன்னாள் போராளி கொலை செய்தே தூக்கிலிடப்படார்-பரபரப்பு வாக்குமூலம்
முன்னாள் போராளி கொலை செய்தே தூக்கிலிடப்படார்-பரபரப்பு வாக்குமூலம்