‘சமஷ்டி’ ஒருபோதும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தாது: டிலான் பெரேரா
நாட்டில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சமஷ்டியே சிறந்த முறையென தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா, சமஷ்டி என்பது ஒருபோதும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தாதென தெரிவித்துள்ளார்.
சமஷ்டி குறித்து நாட்டில் காணப்படும் பல்வேறு விமர்சனங்கள் குறித்து ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒற்றையாட்சியின் கீழேயே புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்பட வேண்டுமென்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டில் தான் இருந்தாலும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வே பிரச்சினைகளை தீர்க்க உகந்ததென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலும் தான் சமஷ்டிக்கு ஆதரவாகவே குரல்கொடுத்ததாகவும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.