எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை இன்று மாலை கையளிக்க தீர்மானம்
எல்லை நிர்ணய குழுவின் இறுதி அறிக்கை இன்று (17) மாலை உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐவர் கொண்ட குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதி ஏ.எஸ்.எம். மிஸ்பார் நேற்று (16) மாலை வரை அவ்வறிக்கையில் கையொப்பமிடவில்லையெனவும் குழுவின் தலைவர் கூறியுள்ளார்.
அவ்வறிக்கையில் நான்கு பேர் கையொப்பமிட்டுள்ளதனால், ஐ.தே.க. யின் உறுப்பினர் கையொப்பமிடாது போனாலும் இன்று மாலை அதனை ஒப்படைக்கவுள்ளதாக அசோக பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை ஒப்படைக்கப்பட்டதும் அது தொடர்பிலான அறிவிப்புக்களை தான் வெளியிடவுள்ளதாகவும் அசோக பீரிஸ் தெரிவித்துள்ளார்.