27ம் திகதி பேரணியில் இணையவுள்ளவர்களுக்கு மகிந்த ஆலோசனை
நுகேகொடையில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டு எதிர்க் கட்சியின் கூட்டத்தில் மேடையேறவிருந்த, அரசாங்கம் சார்பான அமைச்சர்களுக்கு அன்றைய தினம் வருகை தர வேண்டாம் என நாம் அறிவித்துள்ளோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அவ்வாறு அன்றைய கூட்டத்துக்கு வருகை தருபவர்களது குழந்தைகளை பழிவாங்குவதாக அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனாலேயே நாம் வர வேண்டாம் எனக் கூறினோம்.
இவ்வாறு வர இருப்பவர்களில் ஐ.தே.க. யின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. இன்று விகாரையொன்றில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.