Breaking News

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டுள்ளது..!



நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஏற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ இராச்சியம் என்ற அமைப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

அந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகள் ஆரம்பமாக உள்ளன. இந்த அமர்வுகளில் பங்கேற்பதற்காக நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் நான்கு பேர் ஜெனீவா செல்ல உள்ளனர்.

நாடு கடந்த தமிழீழ இராச்சியம் என்ற அமைப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஓர் அரச சார்பற்ற நிறுவனமாக பதிவு செய்துள்ளது.

இதேவேளை, நாடு கடந்த தமிழீழ இராச்சியம் என்ற அமைப்பு ஓர் கனவு அமைப்பு என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியிருந்தார் என சிங்கள நாளிதழ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.