இந்திய மீனவர்கள் ஏழுபேரின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு
இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் ஏழு பேரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியால், நேற்று உத்தரவிட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி, நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 7 மீனவர்கள், இரண்டு விசைப்படகுகளுடன் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த மீனவர்களின் வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.