நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்பட வேண்டும்- அஜித் பி. பெரேரா
நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்பட்டு பாராளுமன்றத்துக்கு கூடிய அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி உறுதியாகவுள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்பட வேண்டும் என்பது இந்த அரசாங்கம் தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியாகும். அதனை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பிரதான பணி எனவும் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.