Breaking News

ஒரே குடும்பத்தின் மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை

மாத்தறை, கந்தரை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் குற்றவாளிகளான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேருக்கு மாத்தறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

2009ம் ஆண்டு கந்தரை, கோட்டகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை ஒன்று தொடர்பில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

காதல் பிரச்சினை ஒன்று காரணமாக கூரிய ஆயுதங்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது. 

குற்றவாளிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள கொலை குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதாக மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த நேற்று தீர்ப்பளித்துள்ளார்.