விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதுடன் பொதுமக்கள் கைவிடப்பட்டுள்ளார்களா…?
1987ம் ஆண்டு இந்திய அரசிடம் ஜந்தம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தார் தியாகி லெப்.கேணல் திலிபனின்.குறித்த அகிம்சை வழிப் போராளியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் 12ம் நாள் அவர் உயிர்நீத்தார்.
குறித்த அகிம்சை வளிப் போராளி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட போது பொதுமக்கள் மத்தியில் பசித்த வயிற்றுடன் உரையாற்றுகையில் அவர் அங்கு கூறியதாவது..
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்” அப்பொழுதுதான் தமிழ் மக்களுக்கு சுபீட்சமானதும் விடுதலையான வாழ்வு கிடைக்கும் என்று கூறினாரே தவிர பொதுமக்களே நீங்களும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பியுங்கள், அப்பொழுதுதான் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று கூறவில்லை.
ஆனால் சமகாலத்தில் நடப்பது என்ன… ஒரு விடுதலை அமைப்பு அழிக்கப்பட்டதுடன் பொதுமக்கள் கைவிடப்பட்டுள்ளார்களா…?
வடக்கில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை பொதுமக்கள் ஆரம்பித்துள்ள நிலையில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்ன செய்கின்றார்கள்…?
பொதுமக்களே தமது பிரச்சினைகளை தீர்பதற்கு போராட வேண்டியிருந்தால் தமிழ் மக்களுக்கான அரசியல் பிரதிநிதிகள் எதற்கு...? பொதுமக்களுக்கும் மத்திய அரசிற்கும் இடையில் சமரசம் பேசுவதற்கா…?
வரிசையில் நின்று காத்திருந்து தமது வாக்குகளை வழங்கி பிரதிநிதிகளை தெரிவு செய்த மக்கள் இன்று உண்ணாமல் உறங்காமல் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் நிலையே தற்போதைய நிலையாக காணப்படுகின்றது.