Breaking News

முல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த ஒருதொகுதி காணி விடுவிப்பு

நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் திறந்து வைக்கப்பட இருந்த இந்த கட்டடத்தொகுதி இறுதி நேரத்தில் ஜனாதிபதி அவர்கள் வருகை தராததன் காரணத்தால் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனால் திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் முல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த 243 ஏக்கர் காணி, முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளபதியால் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது. 

இந்த காணிகளுக்கான அனுமதிகள் பயனாளிகளுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதோடு காணி அனுமதிப்பத்திரம் இதுவரை கிடைக்கப்பெறாத முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த 1,350 பேருக்குச் சொந்தமான காணி அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டன . 

முந்நூறு பேருக்கான தலா ஒரு இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் வடமாகாண பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், வட மாகாணசபை உறுப்பினர் க சிவநேசன், ஜனாதிபதியின் வன்னிக்கான இணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முல்லைத்தீவு இராணுவ கட்டளை தளபதி, மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.