Breaking News

பல்கலைகளின் கல்விசாரா ஊழியர்கள் மீண்டும் போராட்டத்துக்கு முடிவு



மாதாந்தம் வழங்கப்பட்டு வரும் மேலதிக கொடுப்பனவை அதிகரிக்கும் சுற்றுநிருபம் இதுவரை வெளியிடப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழகங்களிலுள்ள சுமார் 14 ஆயிரம் கல்விசாரா ஊழியர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாதம் முதல் அதிகரித்துத் தருவதாக வழங்கப்பட்ட வாக்குறுயை மீறும் விதமாக அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவ்வுழியர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. ்

அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டல், அதற்கு எதிராக நடாத்தப்படும் போராட்டம் குறித்து தீர்மானிப்பதற்கு எதிர்வரும் 31 ஆம் திகதி அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க தொழிற்சங்கங்கள் கூடிக் கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

வழங்கப்படும் சம்பளத்தின் 20 வீதமான மேலதிக கொடுப்பனவை அதிகரித்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிருத்தி கடந்த வருடம் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஆகஸ்ட் 08 ஆம் திகதி அரசாங்கத்தின் வாக்குறுதிகளையடுத்து கைவிடப்பட்டதாகவும் அச்சங்கம் அறிவித்துள்ளது.