கிளிநொச்சியில் முன்னாள் போராளியொருவர் கைது!
கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் முன்னாள் போராளியொருவர் நேற்றிரவு பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திருவையாற்றை சேர்ந்த முருகையா தவவேந்தன் என்ற புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியொருவரே இவ்வாறு நேற்று இரவு 11 மணியளவில் அவரது வீட்டிற்கு சென்ற பயங்கரவாத புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரைக் கைதுசெய்தவர்கள் தானம் காவல்துறையினர் எனத் தெரிவித்ததுடன் வவுனியாவில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தவவேந்தன் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக கிளிநொச்சி பிரஜைகள் குழுவுக்கும் முறைப்பாடு உறவினர்களால் செய்யப்பட்டுள்ளது.