வடக்கு – கிழக்கிலுள்ள பௌத்த விஹாரைகளுக்கு இராணுவ பாதுகாப்பு
வடக்கு – கிழக்கிலுள்ள சகல பௌத்த விஹாரைகள் மற்றும் வீதியோரங்களில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலைகள் ஆகியவற்றிற்கு இராணுவ பாதுகாப்பு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
திருகோணமலை பிரதேசத்தில் அண்மையில் சில விசமிகளால் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டிருந்தன. இதனையடுத்தே இராணுவ பாதுகாப்பு தொடர்பான அறிவித்தலை பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு – கிழக்கில் ஏற்கனவே புதிது புதிதாய் பௌத்த விஹாரைகளும் புத்தர் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளமை குறித்து விசனம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவற்றிற்கு இராணுவ பாதுகாப்பும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.