ஓமந்தையிலிருந்து வெளியேறும் இராணுவத்தினர்
வவுனியா ஓமந்தை ராணுவ சோதனைச்சாவடி அமைந்திருந்த பொது மக்களின் காணியில் இருந்து ராணுவம் வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்னும் சில நாட்களில் குறித்த காணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுத்த காலத்தில் சர்ச்சைக்குரிய சோதனைச்சாவடியாக காணப்பட்ட இச் சோதனைச்சாவடி, 21 குடும்பங்களுக்கு சொந்தமான 24 ஏக்கர் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்தது.
யுத்தம் நிறைவடைந்த பின்னரும் ராணுவம் அங்கு தொடர்ந்து நிலைகொண்டிருந்த நிலையில், ராணுவத்தை வெளியேறுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் ராணுவம் தமது தேவைக்காக அமைத்திருந்த கட்டிடங்களை அகற்றி வருவதுடன் தளபாடங்களையும் அப்புறப்படுத்துவதற்கான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த காணிகளை உத்தியோகபூர்வமாக மீள மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, இன்னும் சில தினங்களில் முன்னெடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.