Breaking News

ஊறணி பிரதேசம் தைப்பொங்கல் தினத்தன்று விடுவிக்கப்படும்

வலி. வடக்கு ஊறணி பிரதேசம் தைப்பொங்கல் அன்று (14.01) இராணுவத்தினரால் கையளிக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். 

வலி.வடக்குப் பகுதிகள் தற்போது விடுவிக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் கடற்றொழில் செய்யும் குடும்பங்கள் இருக்கின்ற காரணத்தினால், கடற்றொழிலை நம்பி வாழும் குடும்பங்களின் நலன் கருதியும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாகவும், ஊறணி கடற்கரைப்பகுதி எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படுகின்றன. 

கடற்பரப்பில் மீன்பிடிக்கச் செல்வதற்கான எல்லைக் கட்டுப்பாடுகள் இராணுவத்தினராலோ மற்றும் கடற்படையினராலோ கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என்றும் மீனவர்கள் தமது பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு தமது எல்லை வரை கடற்றொழிலை மேற்கொள்ள முடியுமென்றும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.