கூட்டு எதிர்க் கட்சியின் நுகேகொடைக் கூட்டம் வெற்றியளிக்கும் -மஹிந்த நம்பிக்கை
நுகேகொடையில் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டம், கூட்டு எதிர்க் கட்சியினால் ஏற்பாடு செய்யப்படுவது. அதில் நான் தலை காட்டிச் செல்பவன் அல்லவென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். நுகேகொடைக் கூட்டம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் இவ்வாறு கூறினார்.
நுகேகொடை ஒரு வெற்றிப் பிரதேசமாகும். இதனால் எமது அரசாங்க எதிர்ப்பு நடவடிக்கையை அங்கிருந்து ஆரம்பிக்கின்றோம். இக்கூட்டத்தை அரசாங்கத்தை கவிழ்க்கும் நடவடிக்கையின் முதலாவது எத்தனம் இதுவென நான் கூறமாட்டேன்.
கூட்டு எதிர்க் கட்சியின் இந்த அரசாங்க எதிர்ப்பு செயற்பாடுகளை குழப்புவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் குற்றம்சாட்டினார்.