Breaking News

முன்னாள் போராளி ஒருவர் சடலமாக மீட்பு

யாழ்.சாவகச்சேரி பகுதியில் முன்னாள் போராளியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சி அலுவலகத்திலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

‘இனியவன்’ எனும் புனைப்பெயரில் அழைக்கப்படும் குறித்த முன்னாள் போராளி, ஜனநாயக கட்சியுடன் இணைந்து அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சடலம் நீதிபதியின் விசாரணைக்காக சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதோடு, விசாரணையை தொடர்ந்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படுமென சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.