Breaking News

இனவாதத்தை தூண்டும் மஹிந்தவுக்கு அரசாங்கம் என்ன செய்யப் போகிறது- சுரேஷ்



சிங்கள, பௌத்த அடிப்படைவாதத்தை தூண்டி, தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாப்பதற்கு முயற்சிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை முன்னெடுக்கப் போகின்றது என்பது ஒரு பெரும் கேள்வியாக மாறியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இனத்துவேசத்தை வளர்த்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து, தான் மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் , அல்லது தனது கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற தேவை மஹிந்த ராஜபக்ஷவிக்கு ஏற்பட்டுள்ளது.

அவரது குடும்பத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள, கொலை முயற்சி மற்றும் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றியமை, பாரிய அளவிலான ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.