ஆட்கொலை புரிந்த இராணுவத்தினர் கைதுசெய்யப்பட வேண்டும் : ராஜித
யுத்தத்தை காரணம் காட்டி இராணுவத்தினர் படுகொலைகளை புரிந்திருந்தால் அவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித்த சேனாரத்ன தெரிவித்திருக்கின்றார்.
ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் யுத்தக் குற்ற விசாரணை உட்பட 58 நிபந்தணைகளுக்கு இணங்கியுள்ளதாக கூட்டு எதிர்கட்சி உட்பட எதிரணியினரால் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ராஜித்த இவ்வாறு கூறியிருக்கின்றார்.